Saturday

கிளி ஜோசியம்:

"என்னடா இது காலை'ல இருந்து ஒருத்தற்குட வரல! நாமலே இந்த தொழில்
ஆரம்பிச்சு ஒருவாரம் தான் ஆகுது, அதுக்குள்ள எல்லாரும் உஷார்
ஆயிட்டங்களா!" என முனு முணுத்து கொண்டிருந்தார் சிவநேசன். அருகில்
கூண்டில் இருந்த கிளி 'கி', 'கீ'', 'மச்சான்- நெல்லு', 'கீ, கீ - மச்சான்
நெல்லு ' என்று கொஞ்சும்படி சத்தம் போட்டுகொண்டே இருந்தது. அடச் சீ
சும்மா இரு, நீ வேற எப்ப பாத்தாலும் நை நைநு கத்திக்கிட்டு. வாய மூடுடி
நமீதா” என்று தனது கூண்டுகிளியை அதட்டினார்.

"சரி, சும்மா இருக்கறதுக்கு பதிலா நம்ம நேரம் எப்படி இருக்குனு நமீதா கிட்ட
கேட்டு பாப்போம்" என்று தனது கிளியை "இந்தாமா நமீதா, சிவநேசன்'ர பேருக்கு
இன்னைக்கு நாள் எப்படி இருக்குனு ஒரு சீட்ட எடுத்து கொடு பாக்கலாம்"
என்றார். நமீதா'வும் ஒரு சீட்டை எடுத்து கொடுத்து விட்டு நெல் மணி ஒன்றை
வாங்கி கொண்டு தன் கூண்டிற்குள் சென்றது. சீட்டை வாங்கிக்கொண்ட
சிவநேசன், அதை பிரிக்க வில்லை. அவருக்கு ஒரு தயக்கம். இதுவரை நமீதா'வை
அவருக்காக இப்படி சீட்டை எடுக்க சொன்னதில்லை. சற்று தயக்கத்துடன் அந்த
சீட்டை பிரித்து பார்த்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அதில் ஒரு எமதர்மன் படம் போட்டிருந்தது. கூடவே ஒரு சிறு வரி அவர் கண்ணில் தென்பட்டது.
அதில் "இன்று ஆறு மணிக்குள் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் எச்சரிகையாக இருங்கள்" என்று இருந்தது". சீட்டை கீழே போட்டுவிட்டு "ஏ இம்சபுடிச்ச நமீதா, உனக்கு எத்தன நெல்மணி கொடுத்திருப்பேன், எத்தன தடவ தக்காளி,மாம்பழம்'லாம் ஊட்டி விட்ருக்கேன் இப்படி பண்ணிட்டியேடி" என்று
கிளி'யை திட்டிவிட்டு, “என்னடா இது, இப்படி ஒரு சீட்ட என்னோட வாழ்ழ் நால்'ல
நமீதா யாருக்கும் எடுத்து கொடுத்ததே இல்ல, நமக்கு மட்டும் எப்படி இப்படி?"
என்று பயந்துபோய் யோசிக்க தொடங்கிவிட்டார் சிவநேசன்.“

மதியம் இரண்டு மணி ஆனது, பசிக்க தொடங்கியதால், சிவநேசன், தந்து மதிய
உணவை பிரித்து உண்ண ஆரம்பித்தார். கிளி'க்கும் ஒரு மாம்பழ தோலை
கொடுத்தார். இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். வழக்கம்போயல் நடைபாதையில்
அமர்ந்துகொண்டு சாலையில் அங்கும் இங்கும் சீறி பாய்ந்து கொண்டிருந்த
மின்னல்-வேக வாகனங்களை பார்த்துகொண்டிருந்தார் சிவநேசன்..ஒரு வேலை,
இதுபோன்ற வாகனத்தால் தன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, என பயந்து
அவரது வழக்கமான இடத்தைவிட்டு சாலை ஓர நடைபாதைவிட்டு சட்று தூரம்
போய் ஒரு மரத்தின்கீழ் படுத்து கொண்டார் சிவநேசன். கீழே படுத்தவாறு மேல்
இருந்த மற-கிளைகளை பார்த்தார். ஒவ்வொன்றும் பெரிது பெரிதாக இருந்தது.
"ஆத்தாடி இது என்னடா இவ்ளோ பெரிய கிலைங்க. இதுல ஒண்ணு காத்து அடிச்சு நம்ம மேல விழுந்தாலும் நாம அவ்ளோதான்" என்று பயந்து, அங்கிருந்து எழுந்து
மரம், சாலை எதுவும் இல்லாத ஒரு இடத்திற்கு பொய் அமர்ந்துகொண்டார். நேரம்
நான்கு மணி ஆனது. நேரம் போக போக சிவநேசன் பயம் ஏறியது.

ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சிவநேசன்'ஐ நோக்கி வந்து
கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வேகத்துடன் நேராக சிவநேசன்'ஐ இடிப்பதுபோல்
வந்து பிரேக் பிடித்தான். பயந்துபோன சிவநேசன், எதுவும் பேசவில்லை.
"எப்படி இந்த விபத்தில இருந்து தப்பிச்சோம்" என நினைத்துகொண்டிருந்தார்.
சிவநேசன் "என்ன தம்பி இப்படி வரிங்க. கொஞ்சம் நிதானமா வரகுடாத?" என்றார்.
"யோவ், என்ன நெனவிருக்கா?" என்றான் பைக் ஓட்டிய ஆனந்தன்.

"தம்பி யாருன்னு தெரிலயே? யார் நீங்க?" என்றார் சிவநேசன். "ஏன்'யா
சொல்லமாட்ட, முந்தாநாள் சும்மா இந்த வழியா நடந்து போயிடு இருந்த என்ன
வல்லுகட்டாயமா புடிச்சு இழுத்து, என்னனமோ பேசி உங்கிட்ட கிளி-ஜோசியம்
பாக்க வெச்சியே. ஞாபகம் இருக்கா?" என்றான். "ஆமா'ல உன் வேல என்னாச்சு?
உனக்கு வேல கிடச்சிருகுமே? ஏனா ஐய'வோட நமீதா அந்த மாதிரி. கொஞ்சம் கூட
தப்பா சொல்லாது'ல" என்றார் சிவநேசன்.

"வெறுப்பு ஏத்தாதையா, வேலையும் கிடைகல, ஒண்ணும் கிடைகல. இனிமே
எவனுக்காச்சும் நீ ஜோசியம் பாத்து குறி சொல்லு, அவ்ளோதான்யா உனக்கு,
சொல்லிட்டேன்." என்று திட்டிகொண்டே ஆனந்தன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
சிவநேசன்'ற்கு ஒரு சந்தோசம், "அப்பாடா, நம்ம நமீதா சொன்னது பலிக்கல.
அப்படினா, நாமளும் தைரியமா இருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டு அவர்
தனது பழைய இடத்திற்கே (சாலை அருகில் உள்ள நடை பாதை) சென்று அமர்ந்து
கொண்டார்..

பயம் ஏதுமின்றி சிவநேசன் தன்னிடம் கிளி-ஜோசியம் பார்க்க யாராவது
வருகிறார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார். நேரம் மாலை 5.50.
நமீதா'வின் சீட்டு சொன்ன நேரம் முடிய இன்னும் வெறும் பத்து நிமிடங்களே
இருக்கிறது. பட படவென சிவநேசன் அருகில் வந்த ஒரு பெண்மணி "ஐயா,
நீங்கதான் இனிமே எங்க குடும்ப ஜோசியர். எத்தனையோ எடத்துல என் பொண்ணுக்கு ஜோசியம் பார்த்தோம், ஆனா அவங்க சொன்னது எதுவுமே நாடகள, ஆனா உங்க கிளி மட்டும்தான் சாமி, எங்க பொண்ணுக்கு சரியாய் சொல்லிருக்கு. கிளி சொன்ன மாதிரியே என் பொண்ணுக்கு நேத்துதான் ஒரு நல்ல வரன் கிடச்சிது. எல்லாம் பேசி முடிச்சிட்டோம், அவசியம் உங்களுக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வருவேன்" என்று சொல்லியபடியே அந்த பெண்மணி கிளியின் கூண்டில் 100 ருபாய் ஒன்றை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

பகல் வெளிச்சம் மங்கி, இருள் சூழ ஆரம்பித்தது. சிவநேசன் முகத்தில் ஒரு
படபடப்பு. தன கை-கடிகாரத்தில் நேரத்தை பார்த்தார். ஆறு மணியாக இன்னும்
இரண்டே நிமிடங்கள் தான். அவர் கை-காரத்தை பார்த்துகொண்டே இருக்க திடீரென
பயங்கர ஹார்ன் சத்தத்துடன் பெரிய கண்டைநேர் லாரி நேராக அவரை நோக்கி படு
வேகமாக வந்து கொண்டிருந்தது. (Mudivu ungalidam)